CEO Desk

The Eternal Connection: A Poetic Reflection at Love and Loss

Barnabas Tiburtius
Chennai, Tamilnadu, India
A seeker throughout his life, he is involved in multi-discipline learning and his field of enquiry covers Cosmology, Sustainable Technology, Strategic Leadership, Philosophy and Spirituality. He has authored many papers, articles, and books. He is a good communicator and systemic thinker and has delivered many keynote addresses, endowment lectures, and empowering talks. He regularly conducts workshops and seminars on spirituality and personal empowerment.

A Posting from His Blog

THE PHYSICAL SEPARATION OF OUR NEAR AND DEAR ONES LEAVES A BIG SCAR AND PAIN IN US; LET US HAVE A LOOK AT THE THOUGHTS FROM THE OTHER SIDE!

I have translated an Irish Funeral poem found in the above blog in Tamil (not exactly):

அன்புஉறவுகளே, எனக்காக
வருந்த வேண்டாம்,
நான் இப்போது சுதந்திரமாக உள்ளேன்!
இறை தந்தை எனக்காக வகுத்த பாதையில் நடந்தேன்
அவன் முகத்தை பார்த்தேன்! அவன் குரல் கேட்டேன்!
அப்பா என ஆசையாக அழைத்தேன்!
அவன் கரம் பற்றினேன், அனைத்தையும் அப்படியே விட்டேன்....
இன்னும் ஒரு நிமிடம் கூட நிற்க முடியவில்லை
அன்பு காட்டவோ, சிரிக்கவோ, விளையாடவோ!
முடியாத வேலைகள் அப்படியே தான் நிற்கவேண்டும்!
என் பிரிவு உங்களுக்கு ஈடு செய்ய முடியா இழப்பை கொடுத்தால்!
நான் உங்களிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும், உங்கள்
நட்பையும், இனிய நம் உறவின் வலிமையையும் வைத்து
நிறை செய்யுங்கள்!
இனிய இவை எல்லாம் நானும் இழப்பேன்!
என் வாழ்வு நிறைவாக இருந்தது!
முழுமையாக நான் உங்கள் அன்பு, நட்பு, கனிவு, பாசம், சுவையான உணவு வகைகள் இவற்றை அனுபவித்தேன்!
நன்றிகள் பல!
வாழ்ந்த காலம் சிறிது என எண்ணி வருந்த வேண்டாம்!
கண்ணீர் கடலில் உங்கள் வாழ்வை கரைத்து கொள்ள வேண்டாம்!
நம்பிக்கையில் அடியெடுத்து நாளையை எதிர் கொள்ளுங்கள்!
மன்னிப்பு, விட்டுக் கொடுத்தல், ஒருவர் மற்றொருவர்
குறைகளுடன்
ஏற்று வாழுங்கள்,
என் அன்பு பணி தொடர்வதே
நீங்கள் எனக்கு செய்யக்கூடிய செயல்! செய்வீர்களா?